ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வயிற்றில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களை தடுக்கும் கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் அமினோ அமிலங்கள், கிளைக்கோசைடுகள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

 
ஒரு டம்ளர் நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, அதில் 35-40 கறிவேப்பிலை இலைகளை சேர்த்து 2 மணிநேரம் ஊற வைத்து  வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
 
கறிவேப்பிலையை அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி, அதை 1 டம்ளர் மோருடன் கலந்து, ஒரு நாளைக்கு 2 முறைகள்  குடிக்க வேண்டும்.
 
ஒரு டம்ளர் நீரில் கறிவேப்பிலையை போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை தினமும் பலமுறைகள் குடிக்க  வேண்டும்.
 
40 கிராம் கறிவேப்பிலை பொடி மற்றும் 10 கிராம் சீரகத்தை ஒன்றாக கலந்து சாப்பிட்டவுடன், 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரைக்  குடிக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து 1 ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். இம்முறையை ஒரு நாளைக்கு 3-4 முறை சாப்பிட  வேண்டும்.
 
சிறிதளவு நீரில் கறிவேப்பிலை, சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து அதை வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை  சாறு மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும்.
 
கறிவேப்பிலையில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆல்கலாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகின்றது.
 
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. எனவே இது இளநரை, முடி உதிர்வு மற்றும் கண் தொடர்பான  பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
 
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிபாக்டீரியல், வாயுத் தொல்லை, பித்தம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சரிசெய்து, வயிற்றில் நோய்த்தொற்றுக்கள் ஏற்படாமல் தடுத்து, வயிற்றை சுத்தமாக்க உதவுகிறது.