திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (17:13 IST)

இரத்தம் சுத்தம் இல்லாமல் இருப்பதை எவ்வாறு சரிசெய்வது...?

blood
பீட்ரூட் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், வைட்டமின்களான ஈ, சி, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் அடங்கியுள்ளன.


செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளி தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகும்.

அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு குணமாகும். இரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுப்போட்டால் போதும்.

இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள் கேரட்டும் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. அதற்கு இதனை பச்சையாகவோ, வேக வைத்தோ அல்லது ஜூஸ் வடிவிலோ உட்கொள்ளலாம்.

இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் நலத்துடன் இருக்க தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெதுவெதுப்பான நீரை ஒரு தாமிர பாத்திரத்தில் வைத்து விட்டு. காலையில் எழுந்தவுடன் அந்த நீரை பருகுவதால் இரத்தம் சுத்தம் செய்யப்படுகிறது. தாமிரம், கல்லீரலை குளிர்ச்சியடைய வைக்கிறது. தண்ணீர் கழிவுகளை வெளியேற்றுகிறது.