திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தேனை எதனுடன் கலந்து சாப்பிட்டால் என்ன பலன்கள்...!

பாலுடன் தேன் கலந்து காலையில் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் வேறுசில நன்மைகளும் கிடைக்கும்.
இரவில் தேன் கலந்து சாப்பிட்டால் இதயம் வலிமை பெறும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சக்தி கிடைக்கும்.
 
மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும். எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.
 
சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்க சிறந்த மருந்தாக இந்த தேனில் ஊறவைத்த பூண்டு  பயனளிக்கிறது.
 
ஆரஞ்சுப் பழச்சுளையில் தேன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும். தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண், வாய்ப்புண்  குணமாகும்.
 
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும். சுண்ணாம்பில் தேன் கலந்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவ, வீக்கம் குறையும்.  கட்டிகளும் ஆறிவிடும்.


 
ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும், சிலருக்குக் கை, கால்கள், விரலகள் மற்றும்  உடல் நடுங்க ஆரம்பிக்கும் இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம்  காண்பார்கள்.
 
ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வர பலன் கிடைக்கும்.
 
ஒரு வேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத்  தேனைவிடச் சிரந்த மருந்து இல்லை.
 
தேனை துளைசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவகளுக்கு  முகவும் நல்லது.