செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 14 மே 2022 (16:10 IST)

பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்களும் பலன்களும் !!

Fruits
பழங்களில் உள்ள உயர்தர ஊட்டச்சத்துக்கள், உயர்ந்த நார்ச்சத்து நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தினசரி ஏதாவது ஒருவகையில் பழங்களை உட்கொள்ளலாம்.


பழம், காய்கறி சாப்பிடுவதன் மூலம் இதயநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை, டைப் 2 நீரிழிவு ஏற்படுவதில்லை, சில புற்றுநோய்கள் குணமடைகின்றன. உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதில்லை என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். மேலும் உடல்பருமன் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.

நொறுக்குத்தீனி சாப்பிடுவதை தவிர்த்து பழங்களில் அன்னாசி, மாம்பழம், திராட்சை, ஸ்ட்ராபெர்ரீஸ், கிவி, வாழைப்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள், தாது உப்புகள், நார்ச்சத்துக்கள், போலேட் ஆகியவை அடங்கியுள்ளன. பழங்களை ப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை விட புதிதான பழங்களை தேர்வு செய்து அப்படியே சாப்பிடுவது நல்லது.

உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது.
காலை அல்லது இரவில் நேர உணவில் கண்டதையும் உண்பதை விட பழங்களை சேர்த்துக்கொள்வது நல்லது.

டின்களில் அடைத்து கடைகளில் விற்பனை செய்யப்படும் பழச்சாறுகளில் உடலுக்கு தீங்கு ஏற்படக்கூடிய ரசாயனங்கள்தான் அடங்கியுள்ளன. ஃப்ரெஸ்சாக நாமே தயாரித்து அருந்தும் பழச்சாறுதான் நன்மை தரக்கூடியது. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்து உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

அதிக அளவில் நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்பவர்களுக்கு இதயநோய், நீரிழிவு, உடல்பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதில்லை.