வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 21 மே 2022 (17:01 IST)

அக்குள் பகுதியில் ஏற்படும் கருமையை போக்க சில எளிய குறிப்புகள் !!

Armpit
ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு அக்குளை பராமரிப்பதன் மூலம் போக்க முடியும். இங்கு அக்குளில் உள்ள கருமையைப் போக்க உதவும்.


கற்றாழை கற்றாலையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து சுமார் ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அத்துடன் பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தயிர், மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவி, உலர வைக்க வேண்டும். இந்த முறையினாலும் அக்குள் கருமையைப் போக்கலாம்.

 வெள்ளரிக்காயை தினமும் வெட்டி, அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும் அல்லது வெள்ளரிக்காய் சாற்றில், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதனை அக்குளில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

அதிமதுர வேரை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து அதனை அக்குளின் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் அக்குள் கருமை மறைவதோடு, அக்குளில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.