திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

கரும்புள்ளிகள் மறைய செய்யும் இயற்கை மருத்துவ குறிப்புகள்...!!

முகப்பரு வந்தவுடன் அதை ஆரம்பத்திலே கிள்ளி எறியவேண்டும் என்ற எண்ணத்துடன் பருவை கிள்ளி விடுகின்றனர். பரு சிதைந்து நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறுகின்றன. அவற்றை நீக்க சில இயற்கை வழிமுறைகளை பார்ப்போம்.
அரிசி மாவை தண்ணீர் விட்டு கிரீம் போல் கலக்கி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.
 
வெந்தயக் கீரையை நன்கு அரைத்து பேஸ்ட்செய்து கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தில் தடவி, சிறிதுநேரம் காயவைத்து, பிறகு கழுவவேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.
 
இலுப்பை இலையை மைபோல் அரைத்து இரவில் பூசி காலையில் கழுவி வர கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகும்.
 
கொத்துமல்லி மற்றும் மஞ்சள் கொத்தமல்லியுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பேஸ்ட்செய்து முகத்தில் தடவி காயவைத்து கழுவ வந்தால் கரும்புள்ளிகள் மறையும். இதை வாரம் இரு முறை செய்யலாம்.
 
ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.
 
இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன் கலந்து, தடவி வந்தால், கரும்புள்ளிகள் சீக்கிரம்போய் விடும்.
 
உருளை கிழங்கை வெட்டி கரும்புள்ளிகள் மீது தேய்த்து வர கரும்புள்ளிகள் மறையும்.
 
மஞ்சளுடன் கருவேப்பிலை சாறு சேர்த்து முகத்தில் தடவி வர கரும்புள்ளிகள் மறையும்.
 
பாதாம் பருப்பு பொடி 1/2 ஸ்பூன் கடலைமாவு 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன் மூன்றையும் கலந்து பசை போல் செய்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து கழுவி வர கரும்புள்ளி, வடுக்கள் மறையும்.