1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

முட்டைகோஸ் வேகவைத்த நீரின் ஆரோக்கிய நன்மைகள் !!

முட்டைகோஸில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. முட்டைக்கோஸில் விட்டமின் பி-5 வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற சத்துக்கள்  இருக்கிறது.

முட்டைகோஸ் சமைக்கும் போது அதனை வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டிய பிறகுதான் சமைப்போம். இனி அந்த தவறை செய்யாதீர்கள். ஏனென்றால்  முட்டைக் கோஸ் வேக வைத்த நீரை குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது.
 
வயிற்று அல்சரால் அவதிப்படுபவர்கள் முட்டை கோஸ் வேகவைத்த நீரை தினமும் குடித்து வந்தால் அல்சர் வேகமாக பறந்து போகும்.
 
சருமம் பொலிவில்லாமல் இருப்பவர்கள் தினமும் முட்டை கோஸ் நீரை குடித்தால் சருமம் பொலிவாக இருக்கும். மேலும் கரும்புள்ளி, முகப்பருக்கள் மறையும்.
 
முட்டை கோஸ் நீரில் கூந்தலுக்கு தேவையான புரதம் மற்றும் கோலாஜன் இருக்கிறது. இதனை குடித்து வந்தால் கூந்தலுக்கு இயற்கையாக போஷாக்கு கிடைக்கும். இதனால் அடர்த்தியாக கூந்தல் பெறுவீர்கள்.
 
பல்வலி, பல் வீக்கம், பல் சொத்தை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த நீரை வாயில் அரை நிமிடம் வரை வைத்து பின் குடிக்கவும். இதனை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
முட்டை கோஸ் நீரில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸென்டென்டுகள் இருப்பதால் இவை இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்கிறது. உடல் பருமனை  குறைக்கிறது. உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை கரைகிறது.
 
முட்டை கோஸ் வேகவைத்த நீரில் விட்டமின் கே அதிக அளவு இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எலும்பு தேய்மனம், மூட்டுவலி  வராமல் தடுக்கும்.