வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மரு‌த்துவ குண‌ம் நிறைந்த இஞ்‌சி சளியை எளிதில் விரட்டும் அற்புத மருந்து!!

ஆயுர்வேதா, சித்தா, யுனானி முறைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் பலவற்றில் இஞ்சி முக்கிய இடத்தைப் பெறுகிறது. வாயு சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் அஜீரணக் கோளாறுகளுக்கும் இஞ்சி ஒரு நல்ல நிவாரணி.



வயிற்றுவலி, வாந்தி, பித்தம் மற்றும் வயிற்றில் ஏற்படும் பல தொந்தரவுகளையும் இஞ்சி நிவர்த்தி செய்யும். சாப்பிட்ட பின்பு சிறிது இஞ்சியைச் சாப்பிட உமிழ்நீரின் அளவை அதிகப்படுத்தி வயிற்று உபாதைகளைச் சரிசெய்கிறது.
 
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும்.
 
அரை ஸ்பூன் இஞ்சிச்சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சம்சாறு, ஒரு ஸ்பூன் புதினாச்சாறு, ஒரு ஸ்பூன் தேன் ஆகிய நான்கினையும் ஒன்றாகக் கலந்து தினம் மூன்று வேளை சாப்பிட பித்தத்தினால் ஏற்படும் வாந்தி, மசக்கையினால் ஏற்படும் வாந்தி, மஞ்சட்காமாலை, மூலம், மாமிச உணவை அதிகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் கோளாறுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் ஆகியவற்றைச் சரி செய்யும்.
 
அடிக்கடி இருமலினால் கஷ்டப்படுபவர்கள் இஞ்சிச் சாறும் தேனும் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சளியில் இருந்து விடுபடும் வரை சாப்பிட வேண்டும். இஞ்சியைச் சிறிது சிறிதாக வெட்டி தண்ணீரில் இட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வடிகட்டி சிறிது சர்க்கரையுடன் சூடாக பருக மூக்கில் நீர் வடியும் பிரச்சினை சரியாகும்.
 
இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கிடைக்கும் கஷாயத்துடன் அரை ஸ்பூன் இஞ்சிச்சாறும் சிறிது தேனும் கலந்து பருக நுரையீரல் போன்றவற்றில் அடைத்துக் கொண்டிருக்கும் சளி தானாகவே வெளியேறிவிடும். வயிற்றில் புண் இருப்பவர்களுக்கு இந்த கஷாயத்தைக் கொடுக்கக் கூடாது.
 
அரை ஸ்பூன் இஞ்சிச் சாற்றை அரை வேக்காடு முட்டை மற்றும் தேன் ஆகியவற்றைக் கலந்து தினம் ஒரு முறை இரண்டு மாதங்கள் சாப்பிட உணர்வு நரம்புகளைப் புதுப்பித்து ஆண்களின் மலட்டுத் தன்மையைப் போக்குவதுடன் உடலிற்கு புதுப்பலத்தையும் அளிக்கும்.
 
சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். இனி இருமல், சளி வந்தால் இந்த முறையை பின்பற்றி பாருங்கள் உடனடி பலன் கிடைக்கும்.