புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

முகப்பரு மற்றும் முகப்பரு வடுக்கள் மறைய இந்த முறையை பின்பற்றுங்கள்...!

முகப்பருக்கள் வந்து மறைந்தாலும், அது வந்ததற்கான தடம் அப்படியே இருக்கும். பரு வந்து நீங்கிய இடத்தில் உள்ள பாதிப்படைந்த இறந்த  செல்களை  நீக்கினால்தான் தோலில் உயிரணுக்கள் புதிதாக உருவாகும்.
முகப்பருக்கள் மறைய இயற்கை முறையிலான இந்த முறையை பின்பற்றுவதன் மூலம், பருக்கள் மறைந்து முகம் பொலிவு பெறும். நமது  வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி முகப்பருவை நீக்குவது, வராமல் எப்படித் தடுப்பது, முகப்பரு வந்து நிரந்தரமாக  ஏற்படுத்திவிட்ட தழும்புகளை போக்குவது என்பது பற்றி பார்ப்போம்.
 
1. முகப்பருக்கள் மறைய:
 
தேவையான பொருட்கள்: சோற்றுக் கற்றாழை தோல் நீக்கியது - 1 துண்டு (2 இஞ்ச்), செம்பருத்தி பூ - 3, ரோஜா  பூ - 1, வெந்தயம் - அரை ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் - 5 கிராம், சந்தனத் தூள் - 5 கிராம்.
 
எடுத்து நன்றாக மிக்ஸியில் அரைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்த பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் முகப்பரு மறைவதுடன் முகமும் பளபளக்கும்.
2. முகப்பரு வடுக்கள் மறைய:
 
தேவையான பொருட்கள்: கஸ்தூரி மஞ்சள் - 10 கிராம், சந்தனத்தூள் - 5 கிராம், கசகசா - 10 கிராம், கறிவேப்பலை காய்ந்தது - 5 கிராம்.
 
இவற்றை நன்கு அரைத்து தயிரில் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு மாறும். ஜாதிக் காயை அரைத்து அதனுடன் சந்தனத்தூள் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மாறும். முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, ரோஜா இதழ்களைப் பொடியாக்கி  கலந்து  முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பரு நீங்கும்.