செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மூச்சு குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாகும் முசுமுசுக்கை !!

முசுமுசுக்கை கீரை கொடி வகையைச் சேர்ந்த ஒரு கீரையாகும். இது துவர்ப்பு, மற்றும் கார்ப்புச் சுவையுடனும், வெப்பத் தன்மையும் கொண்டது. 
 

முசுமுசுக்கை கீரையின் இலை மற்றும் வேர் மருத்துவ குணம் கொண்டவை. முசுமுசுக்கை கீரையில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள்  நிறைந்து உள்ளது.
 
முசுமுசுக்கை கீரையில் புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் ‘C’ ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.
 
முசுமுசுக்கை கீரையை உணவில் சேர்த்து கொண்டால் சளி, கோழை, தும்மல், குறட்டை ஆகிய பிரச்சினைகள் சரியாகும். முசுமுசுக்கையானது மூச்சுக் குழாயில்  ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
 
முசுமுசுக்கை கீரையானது நோயால் பாதிக்கப்பட்ட உடலை வலுபெறச் செய்யும். காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களின் நாவானது சுவையை இழந்திருக்கும்.  அப்படிப்பட்டவர்கள் முசுமுசுக்கை கீரையை உண்டால் நாவில் ஏற்பட்ட சுவையின்மை நீங்கும்.
 
கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக முசுமுசுக்கை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழ்கினால் நல்ல  நிவாரணம் கிடைக்கும்.
 
முசுமுசுக்கையானது இளநரையை கட்டுபடுத்தும், காச நோயை குணபடுத்தும். உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் முசுமுசுக்கையை எடுத்து கொண்டால் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.