ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் எலும்புகளை வலிமை அடைய செய்ய உதவும் மீன் எண்ணெய் மாத்திரை !!

மீன் மாத்திரை அல்லது மீன் எண்ணெய் மாத்திரை என்பது பண்ணாமீன் என்ற வகை மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த பண்ணா வகை மீனின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படுகிற எண்ணெயிலிருந்தே மீன் மாத்திரை தயாரிக்கப்படுகிறது. 

இதில் வைட்டமின் A, வைட்டமின் D மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருக்கிறது. கண் சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு ஒரு சிறந்த உணவுப் பொருளாக மீன் எண்ணெய் மாத்திரை இருக்கிறது. கண் பார்வைக்கு வைட்டமின் ஏ நல்லது என்பதை அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். 
 
வைட்டமின் D-யானது உணவில் இருக்கும் கால்சியத்தை கிரகித்துக் கொள்வதற்கும், செல்களின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவி செய்யும்.
 
கொலஸ்ட்ராலைக் குறைக்கும். உடலில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதன் மூலம் உடை எடையையும் குறைக்கும். காயம் ஏற்பட்டால் காயத்தை ஆற்றும் அருமருந்தாக இருக்கிறது. மேலும் பாக்டீரியா, வைரஸ் எதிர்ப்புத்தன்மைக்காகவும் மீன் மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற காரணங்களாலேயே மீன் மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
 
மீன் மாத்திரை சத்தான மாத்திரை என்றாலும் மருத்துவரின் பரிந்துரையின்றி உட்கொள்ளக் கூடாது. அதேபோல் ஒரு நாளைக்கு ஒன்றுதான் சாப்பிட வேண்டும். 
 
30 வயதைக் கடந்த ஆண்களும், பெண்களும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதால் அதிலிருக்கும் வைட்டமின் டி சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கால்சியம் சத்துக்களோடு சேர்ந்து உடலின் எலும்புகளை வலிமை அடைய செய்து உடலுக்குக் கூடுதல் பலத்தை தரவல்லதாக இருக்கிறது.
 
அல்சர் புண்களை குணமாக்குவதற்கு ஒரு சிறந்த மருந்தாக மீன் எண்ணெய் மாத்திரை இருக்கிறது. இந்த மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு வயிறு மற்றும் குடல் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்களை விரைவில் ஆற்றும்.