புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது...!!

காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாள் முழுவதற்குமான ஆற்றலை கொடுக்கக்கூடியது. எனவே தவறாமல் காலை உணவை சாப்பிட்டுவிட வேண்டும். வெறும் வயிற்றில் சில உணவுகள் நமக்கு மிகவும் நல்லதல்ல என்பதை ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். அவை என்ன என்பதை பார்ப்போம். 
தக்காளியில் வைட்டமின் C மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருந்தாலும், அவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், தக்காளியில் உள்ள டானிக் அமிலம் வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் இரைப்பை  பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 
 
வெறும் வயிற்றில் குளிர்பானம் குடிப்பதால் வயிறு வீக்கமடையலாம் அல்லது சிதையும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிகப்படியான கார்பனேற்றப்பட்ட பானங்களை உட்கொள்வது வயிற்றில் அமில நிலைகளை அதிகரித்து, இது உணவுக்குழாய் புற்றுநோய்க்கு காரணமாக  மாறும்.
 
அதிகாலையில் நொருக்கு தீணிகளை சாப்பிடுவதால் இது உங்கள் வயிற்றை எரிச்சலூட்டும் ஈஸ்ட் நிறைந்துள்ளது. எனவே, அந்த உணவுகளை  வெறும் வயிறில் சாப்பிடுவது உடலுக்கு ஆபத்து விளைவிக்கும். 
 
வெறும் வயிற்றில் காரமான உணவுகளை சாப்பிடுவதால் உங்களுக்கு வயிற்று எரிச்சல் ஏற்படும். இது அமில எதிர்வினைகள் மற்றும்  பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
 
இனிப்பு ஜீரணிக்க மிகவும் எளிதானது. சர்க்கரையை நாம் வெறும் வயிற்றில் உண்ணும் போது, மனித உடலில் இன்சுலின் போதுமான அளவு  சுரக்க முடியாது. இது கண் சமந்தமான நோய்களுக்கு வழிவகுக்கும்.