1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்க உதகிறதா கருஞ்சீரகம்...!!

அடிக்கடி கருஞ்சீரகம் உணவில் சேர்க்கப்பட்டு வரும் போது இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது மற்றும் நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கவும் உதவுகிறது. 

வயிற்றில் அல்சர் உள்ளவர்கள் கருஞ்சீரக பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் புண்கள் ஆறி விடும்.
 
குடல் புழுக்கள் உள்ளவர்கள் கருஞ்சீரக பொடியை வெண்ணீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் குடல் புழுக்கள் நீங்கி விடும்.
 
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாகும் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரோலின் அளவை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரோலை குறைத்து சக்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க கருஞ்சீரகம் உதவுகின்றது.
 
சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை வெந்நீர் மற்றும் தேன் கலந்து காலை, மாலை குடித்து வரகற்கள் கரைந்து சிறுநீருடன் வெளியேறும்.
 
நாள்பட்ட இருமல் அல்லது சளி தொந்தரவு இருந்தால் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் அரை தேக்கரண்டி பூண்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை கரைக்கும் சக்தி கொண்டது.
 
50 கிராம் கருஞ்சீரகம், 250 கிராம் வெந்தயம், 100 கிராம் ஓமம் இந்த மூன்று பொடிகளையும் ஒன்றாக கலந்து எடுத்த பின் தினமும் ஒரு தேக்கரண்டி வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவில் உணவு உட்கொண்ட சிறிது நேரத்துக்கு பின்குடித்து வர வேண்டும். இதை குடித்த பின் எந்த உணவும் உண்ணக்கூடாது. தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்கழிவுகளும் அகன்றுவிடும். மற்றும் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை பெற முடியும்.