1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது ஏன் தெரியுமா...?

சின்ன வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.


பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
 
சின்னவெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயச் சாற்றோடு நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட  வாதநோய் குறையும்.
 
தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும். வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
 
சின்னவெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும். தினமும் மூன்று சின்ன வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல்  நீங்கும்.
 
சின்ன வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெய்யில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும். வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
 
மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
 
வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும். வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.