1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பச்சை பட்டாணியில் என்ன வைட்டமின்கள் மிகுதியாக உள்ளது தெரியுமா...?

பட்டாணியில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. செல்களுக்கு உள்ளே டி.என்.ஏ. தொகுப்பு இயக்கம் சீராக நடைபெற ஃபோலேட்ஸ் என்கிற பி.காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் அவசியம் தேவை. பட்டாணியில் அவை உள்ளது. பட்டாணி உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.


கண் நன்றாக தெரிய வைட்டமின் இ மிகவும் அவசியம். உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் பட்டாணியில் உள்ள வைட்டமின்கள் உதவுகிறது.
 
பட்டாணி சாபிட்டால் வாய் துர்நாற்றமும் குறையும். பட்டணியில் அடங்கியுள்ள நியாஸின், ரிபோபிலவின், தயாமின் போன்ற  வைட்டமின்கள் உள் உறுப்புகள் அனைத்தையும் வலிமைப்படுத்துகின்றன.
 
பச்சை பட்டாணியை தவறாமல் எடுத்துகொள்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வராது. பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்து மிகுதியாக உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூளை செல்கள் புத்துணர்வு பெற்று ஞாபகத் திறன் அதிகரிக்கும், இது அல்சைமர் நோயை தடுக்கும்.
 
பச்சை பட்டாணியில் ரத்தத்தில் இருக்கும் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ளது. பட்டாணியை தொடர்ந்து  சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.
 
பச்சை பட்டாணி அதிக அளவு ஃபோலேட்டுகளைக் கொண்டுள்ளது. ஃபோலேட்டுகள் பிறந்த குழந்தைகளில் நரம்புக் குழாய் சம்பந்தமான குறைபாடுகள்  ஏற்படுவதைத் தடுக்கிறது.