1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (11:02 IST)

உடலில் ரத்தவிருத்தி செய்ய உதவும் பழங்கள் என்ன தெரியுமா...?

மாம்பழத்தில் வைட்டமின்-ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யாப் பழம்: சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின்-சி உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது.
 
வாழைப்பழம்: மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். 
 
ஆரஞ்சுப்பழம்: ஆரஞ்சில் வைட்டமின்-ஏ அதிகமாகவும், வைட்டமின்-சி-யும், -பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். 
 
திராட்சைப் பழம்: எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின்-ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும்.
 
பப்பாளி: வருடம் முழுவதும் கிடைக்கக்கூடடிய பழம் இது. இதிலும் வைட்டமின்-ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. 
 
அன்னாசி: அன்னாசி பழத்தில் வைட்டமின்-பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. 
 
மாதுளம் பழம்: மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உண்டு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலில் இருந்து குணம் பெறலாம்.