செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : சனி, 22 ஜனவரி 2022 (12:37 IST)

தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் சத்துகள் என்ன தெரியுமா...?

கொத்தமல்லி நமது அன்றாட உணவுகளில் தவறாமல் இடம்பெறும் ஒரு கீரை வகையாக கொத்தமல்லி இருக்கிறது. புதிதாக பறிக்கப்பட்ட கொத்தமல்லி கீரையின் இலைகளை மென்று சாப்பிடுவதால் தலைமுடியின் வளர்ச்சி மேம்படும்.


கொத்தமல்லி இலைகளை நன்கு அரைத்து, அதை தலையில் தடவி கொண்டு சிறிது நேரம் கழித்து தலைக்கு குளித்தாலும் தலைமுடி உதிர்வை தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

தலைமுடி உதிர்வை தடுக்க ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து, அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொண்டு, அந்த கரைசலை தலை முடியில் நன்கு தடவி, முக்கால் மணி நேரம் ஊறவைத்த பின்பு தண்ணீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலைமுடி உதிர்வு, பொடுகு போன்றவற்றை தடுக்க முடியும்.

வெங்காயம் சில ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலையில் முடி உதிர்ந்து, அந்த இடத்தில் வழுக்கை ஏற்பட்டது போன்ற நிலை ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக பச்சை வெங்காயம் ஒன்றை எடுத்துக் கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை நன்கு தேய்த்து பிறகு அந்த இடத்தில் சிறிது தேனை தடவி வந்தால் முடி மீண்டும் முளைக்கும்.

பசலை கீரை நமது நாட்டில் கிடைக்கும் கீரை வகைகளில் பசலை கீரையும் ஒரு வகையாகும். இக்கீரைகளில் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின் சத்துகள் அதிகம் உள்ளன. எனவே தினமும் சாப்பிடும் உணவுகளில் பசலை கீரையும் இடம்பெறுமாறு பார்த்து கொள்வதால் தலைமுடி உதிர்வை தடுக்க முடியும்.