அடிக்கடி முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் தெரியுமா...?
முக்கியமாக வயதான காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனை வராமல் தவிர்க்க வேண்டும் என்றால், வாரம் ஒரு முறை முட்டைகோஸ் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது.
உடல் சூட்டை தணிக்கும். தலைமுடி உதிர்வதை தடுக்கும். முடியின் வேர்களுக்கு பலம் கொடுக்கும். இது சரும வறட்சியைப் போக்கி சருமத்திற்கு பொலிவையும் தரக்கூடியது.
முட்டைகோஸ் பச்சையாக அப்படியே சாப்பிடும் பொழுது அதில் இருக்க கூடிய சத்துக்கள் அனைத்தும் நமது உடலிற்கு கிடைக்கிறது. மிக முக்கியமாக, அதிக நேரம் வேக வைக்கக் கூடாது. அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிட்டால், அதில் உள்ளஅனைத்தும் வெளியேறி விடும்.
முட்டைக்கோஸை நறுக்கும் முன்பு நன்றாக கழுவி விட்டு அதன் பிறகு அறுக்க வேண்டும். ஏனென்றால் நறுக்கி விட்டு கழுவினால் அதன் சத்துகளை தண்ணீரில் இழக்க நேரிடும்.
முட்டைக்கோஸை பருப்பு சேர்த்து, பொரியல், கூட்டு அல்லது ஜூஸ் போட்டு சாப்பிடலாம். அதுமட்டுமல்ல முட்டைக்கோஸில் லாப்டிக் அமிலம் உள்ளது. இது குடலில் உள்ள நோய் தொற்றுகளை அழித்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இன்று இளம் வயதினருக்கு உள்ள ஒரு பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம். இவர்கள் முட்டைக்கோசை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் வெகு விரைவில் நீங்கும்.
முட்டைக்கோஸ் ரத்தம் உறைந்து போவதை தடுத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி செய்கிறது. அல்சரால் அவதிப்படுபவர்கள் முட்டைக்கோசை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சர் விரைவில் குணமாகும். ஏனென்றால், இதில் அல்சரரை குணப்படுத்தும் பூளுட்டோமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.