Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து கிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!

Updated: செவ்வாய், 5 ஜூன் 2018 (17:31 IST)
 
உணவு சாப்பிட்டவுடன் கிரீன் டீ குடித்தால் அது நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் ஊட்டசத்துகளை நம் உடலில் சரியாக சேர விடாது மற்றும் சாப்பிட்ட உணவு  செரிமானம் ஆவதிலும் பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் எப்போதும் உணவு சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து கிரீன் டீ குடிக்கலாம்.
 
கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகிவருவதால், பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும். உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
 
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும். கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைத் தூண்டும் தன்மை படைத்தது.
ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும். கிரீன் டீயில் தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளது. தொடர்ந்து  கிரீன் டீ அருந்தும்போது, இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments