1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

குடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் இயற்கை மருந்து கிராம்பு !!

கிராம்பு இலவங்கம், அஞ்சுகம், உற்கடம், கருவாய்க்கிராம்பு, சோசம், திரளி, வராங்கம் போன்ற பல பெயர்களில் அழைக்கபடுகிறது.

கிராம்பு சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிப்பிலும் கிராம்பு முக்கிய பொருளாக சேர்க்கபடுகிறது. மேலும் வாசனைத்  திரவியங்கள், சோப்புத் தயாரிப்பிலும் கிராம்பு பயன்படுகிறது.
 
வாய் துர்நாற்றம், பல் வலி இருப்பவர்கள் கிராம்பை எடுத்துக் கொள்ளலாம். இதன் நறுமணம் வாய் துர்நாற்றத்தை போக்குவதால் பற்பசைகளில்  உபயோகபடுத்தபடுகிறது.
 
4 கிராம் கிராம்பை 3 லிட்டர் தண்ணீரில் இட்டு பாதியாக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமாகும். ஜீரண உறுப்புகளில் சுரக்கும்  நொதிகள் சரியான அளவில் சுரக்க கிராம்பு உதவுகிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
 
கிராம்பை பொடி போல செய்து 1 டேபிள் ஸ்பூன் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள வேதிப்பொருள் வயிற்றிலுள்ள சில  உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
 
வயிற்று பிரச்சனைகளான வயிற்று போக்கு, குமட்டல், வாந்தி, சீரணமின்மை, வாயுத் தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற நோய்களை சரி செய்து வயிறு, குடல் ஆரோக்கியமாக இருக்க கிராம்பு உதவுகிறது. 
 
உடலின் நோயெதிப்பு சக்தியை அதிகரித்து, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.