வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

முடி உதிர்தலை குறைத்து வளர உதவும் வெங்காயம் பேக் !!

வெங்காயம் முடி வளரும் வீதத்தை சற்று அதிகப்படுத்தும். குறிப்பாக முடி உதிரலுக்கு இது மிக சிறந்த மருந்தாகும். வெங்காயத்தில் சல்பரில் நிறைந்துள்ளது.  


சல்பர் முடி உதிர்தலை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் மயிர்கால்களுக்கு போதுமான ஊட்டச்சத்து வழங்குகிறது. சல்பர் கூந்தல் வெடிப்பை  தடுக்கிறது.
 
வெங்காயம் பாக்டீரியா எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தும். வெங்காயம் குறிப்பாக இளநரையை தடுக்க உதவுகிறது. இதில்  எந்த பக்கவிளைவு எற்படாமல் இருக்க கற்றாழை அல்லது தேங்காய் எண்ணையுடன் வெங்காய சாறை கலந்து உபயோகிக்கலாம்.
 
1. ஆலிவ் எண்ணெய் மற்றும் வெங்காய சாறு: தேவையானவை - வெங்காய சாறு 3 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் - ஒன்றரை தேக்கரண்டி. 
 
செய்முறை: நல்ல கலவை வரும்வரை வெங்காய சாறுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் முடியின்வேரில் நன்கு  படுமாறு நன்கு மசாஜ் செய்யவும். சுமார் 2 மணி வரை ஊற விடவும். பின் தலை குளிக்கவும். இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை  பயன்படுத்தலாம். 
 
பயன்கள்: ஆலிவ் எண்ணெய் பொடுகை போக்க உதவும்.
 
2. ஆமணக்கு எண்ணெய் மற்றும் வெங்காய சாறு: தேவையானவை - வெங்காய சாறு 2 தேக்கரண்டி, ஆமணக்கு எண்ணெய்  2 தேக்கரண்டி. 
 
செய்முறை: நல்ல கலவை வரும்வரை வெங்காய சாறுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் முடியின்வேரில் நன்கு படுமாறு நன்கு மசாஜ் செய்யவும். சுமார் 1 மணி வரை ஊற விடவும். பின் தலை குளிக்கவும். இதனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை  பயன்படுத்தலாம். 
 
பயன்கள்: ஆமணக்கு எண்ணெய் உங்கள் தலைமுடியை தடிமனாக்க மற்றும் சிறந்த ஆரோக்கியத்துடன் பராமரிக்க உதவுகிறது.