Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும் வல்லாரை..!

Updated: வியாழன், 12 ஜூலை 2018 (16:41 IST)
 
வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48 அல்லது 96 நாள்  சாப்பிட்டு வர எல்லா நோய்களும் குணமாகும். 
 
உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருடம் சாப்பிட்டால் நரை, திரை மாறும். வல்லாரை மற்றும் தூதுவிளையை சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும்.
 
பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை மற்றும் உத்தாமணி  இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும்.
 
குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் தேநீர் தயாரிப்பு:
 
தேவையான பொருட்கள்: வல்லாரை இலைச்சாறு - 50 மி.லி., நாட்டு சர்க்கரை, பால். ஒரு பாத்திரத்தில் வல்லாரை இலைச்சாறு, நாட்டு சர்க்கரை கலந்து,  பச்சை வாசனை நீங்கும் வரை கொதிக்கவிடவும். பின்னர் வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து பருகுவதால், மறதி நிலை மாறி அற்புதமான நினைவாற்றலை  தருகிறது.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments