புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற குடைமிளகாய் !!

பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடை மிளகாயை பயன்படுத்தி வயிறு உப்புசம், வாயு தொல்லை பிரச்சனையை  போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

குடைமிளகாயில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகமுள்ளது. மேலும் வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.
 
குடை மிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடை மிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்.
 
குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மூட்டு வலிக்கு மருந்தாகிறது. 
 
குடைமிளகாயில் நிறைந்துள்ள "வைட்டமின் சி" சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
 
நீரிழிவு நோயிலிருந்து விடுபட இது ஒரு சிறந்த மருந்து. இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் சர்க்கரையின் அளவு  குறையும்.