வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுமா பன்னீர்...?

பன்னீர் எல்லா வேலைகளிலும் சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள்தான். குறிப்பாக, காலை நேரங்களில் பன்னீர் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான அதிக எனர்ஜி நாளின் தொடக்கத்திலேயே கிடைத்துவிடுகிறது. 

இரவு நேரங்களில் சாப்பிடுவதால் நன்கு தூக்கம் வரும். ஜீரணக்கோளாறு உள்ளவர்கள் மட்டும் இரவில் பன்னீர் அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
 
100 கிராம் பன்னீரில் 18 கிராம் புரோட்டின் உள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைக்க புரோட்டின் மிகவும் அவசியமான ஒன்று. எனவே கட்டுமஸ்தான உடலை  விரும்புபவர்கள் பன்னீரை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். மேலும் இது பசியை கட்டுப்படுத்துவதால் அதிக உணவு உட்கொள்வதை தடுக்கிறது.
 
எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் அவசியமான சத்தாகும். பன்னீரில் அதிகளவு கால்சியம் உள்ளது. எனவே பன்னீர் அதிகம் உணவில்  சேர்த்துக்கொள்ளப்படுவதால் பற்களின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் எலும்புகள் வலுவடைகிறது. இதில் லேக்ட்டோஸ் குறைவாக உள்ளதால் பற்கள்  சொத்தையாவது தடுக்கப்படுகிறது.
 
இளைஞர்கள் பலரும் சருமம் ஆரோக்கியமாக இருக்க அதிக செலவு செய்கிறார்கள். ஆனால் பன்னீர் இந்த வேலையே மிகசுலபமாக செய்யக்கூடியது. இதில் உள்ள  வைட்டமின்கள் மற்றும் செலேனியம் சரும பொலிவை அதிகரிக்கும்.
 
உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது பன்னீரை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அதிகரிக்கிறது. இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் பன்னீர்  தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளப்படும்போது குறைகிறது. இது ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்கிறது. குறிப்பாக இது குழந்தைகளின் நோயெதிர்ப்பு  சக்தியை அதிகரிக்க உதவுகிறது.