1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (19:21 IST)

ஊறவைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

வெந்தயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பல கூறுகள் காணப்படுகின்றன.


வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் அதன் தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்  

வெந்தயக் கீரையை, அப்படியே சமைத்தும் சாப்பிடலாம். அதேபோல, வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.

வெந்தயத்தை தினசரி சாப்பிட்டு வந்தால் பல நோய்களையும் தடுக்க முடியும், வெந்தயத்தை சமைத்தும், விதையாகவும் சாப்பிடலாம்.

நீரிழிவு நோயாளிகள் ஊறவைத்த வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

வெந்தயம் உங்கள் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் நிறைய கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் தேவையற்ற மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

உடல் பருமன் தான் பல நோய்களுக்கு அடிப்படை. உடல் எடை அதிகரிப்பை தடுக்க நினைப்பவர்களுக்கு வெந்தயம் அருமருந்து.

வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கணிசமாகக் குறைக்கிறது.