செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.
 
ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால்… உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
 
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்து காபி குடிக்கலாம். இதனால் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவு சீராத கட்டுக்குள் இருக்கும்.
 
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.. சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.
 
கருப்பட்டியில் இருக்கும் சுண்ணாம்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் வேறு எதிலுமே இல்லாத அளவிற்கு மகத்துவமானது என்று கூறலாம். குறிப்பாக பெண்களுக்கு கருப்பட்டி சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கும். உடலை வலிமையாக்கும்.