வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் பழங்கள் சாப்பிடுவதினால் ஏற்படும் நன்மைகள்....!!

ஆப்பிளில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் போன்ற உயிர் சத்துக்கள் நிறைய உள்ளது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைக்கப்படும்.
குறிப்பாக ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் நிறைய உள்ளது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள். தினமும்  ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிடுங்கள். பழமாக சாப்பிட பிடிக்காதவர்கள் ஜூஸ் செய்து சாப்பிடுங்கள். அதேபோல் தினமும் அதிகம் ஆப்பிள் சாப்பிடுவதினால்,  அவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கண் புரை நோய் ஏற்படுவதை தடுக்கும்.
 
தினமும் ஆப்பிள் மற்றும் ஜூஸ் சாப்பிடுவதினால் இதய நோய் ஏற்படுவதை தவிர்க்கலாம். ஆப்பிளில் உள்ள ஒரு வகை ஊட்டச்சத்து நுரையீரல், மார்பகம் மற்றும் குடல் போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்று நோயை தடுக்கலாம்.
 
மாதுளை பழத்தில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதாவது கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, சோடியம், வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மலச்சிக்கலால் அசதிப்படுபவர்கள் தொடர்ந்து மாதுளம் பழத்தை சாப்பிட்டு வர மலக்சிக்கல் பிரச்சனை குணமாகும்.
 
அதேபோல் வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல பிரச்சனைகளுக்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
 
மாபழத்தில் ஏராளமான ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இரும்புச் சத்து, சுண்ணாம்பு மற்றும் புரதச்சத்து அதிகம் மாம்பழத்தில் நிறைந்துள்ளது.
 
வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதைனால், மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாகும். தினமும்  இணவிற்கு பின் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதினால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
 
பப்பாளி பழத்தை சாப்பிடுவதினால் பல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கும், சிறுநீரக கற்களை கரைப்பதற்கு இந்த பப்பாளி பழத்தை சாப்பிட்டாலே போதும். மேலும்  நரம்புகள் பலமடையவும், ஆண்மை தன்மை பலமடையவும், ரத்த விருத்தி உண்டாக்கவும் ஞாபக சக்தியை அதிகரிக்க தினமும் பப்பாளி பழத்தை சாப்பிடலாம்.