புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பழங்களை தினமும் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

எண்ணற்ற சத்துகளைக் கொண்டதாக பழங்கள் திகழ்கின்றன. இதில் வாழை, பப்பாளி, கொய்யா, அன்னாசி, மாதுளை போன்ற எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்கள் பலவித நோய்களில் இருந்து நமக்கு நிவாரணம் தரக்கூடியவை, மலச்சிக்கல் தொடங்கி இதயநோய் வரை அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தனமை கொண்டதாக உள்ளது.
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் உள்ள பி 6, பி 12 போன்ற சத்துக்கள் உள்ளன. இயற்கையாகவே வாழைப்பழத்தில் அமில எதிர்ப்புச் சக்தி அதிகம். அதனால், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். 
 
பப்பாளிப்பழம்: இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளதால், பல் தொடர்பான குறைபாட்டைத் தீர்க்கவும், சிறுநீர்ப்பையில் ஏற்படும்  கற்களைக் கரைக்கவும் உதவுகிறது. மேலும், இது நரம்புகள் வலுப்பெறவும், ஆண்மை பலம் கிட்டவும், ரத்த விருத்தி பெறவும், ஞாபக சக்தி  அதிகரிக்கவும் துணைபுரிகிறது. பெண்களை அவதிப்படுத்தும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்ய நல்லதொரு மருந்தாகிறது.
கொய்யாப்பழம்: கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் அதிகம் இருப்பதால்,  வளரும் சிறார்களின் எலும்புகளுக்கு பலமும் உறுதியும் தரும். மலச்சிக்கல் கோளாறு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை  தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்து உள்ளது. இது உடலுக்குப் பலம் தருவதுடன், ரத்தத்தை விருத்தி செய்யக்கூடியது. வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்கள் தொடர்ந்து அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும்.  அன்னாசியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், தாது உப்புகள் போன்ற முக்கிய சத்துகள் அடங்கியுள்ளன. தாது உப்புகள் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்துக்கு மிகவும் முக்கியமாகும். கொழுப்புச்சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிக மாகவும் உள்ள அன்னாசி இதய  நோய் வராமல் தடுக்கக்கூடியது.
மாதுளம்பழம்: இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று ரகங்கள் உள்ள மாதுளம்பழம், இதயம், மூளை போன்றவற்றுக்கு சக்தி தரக்கூடியது. புளிப்பு மாதுளை வயிற்றுக்கடுப்பைப் போக்கும். ரத்தபேதிக்கு நல்ல மருந்தான மாதுளை, தடைபட்ட சிறுநீரை வெளியேற்றவும் செய்யும். குடல்புண்ணை ஆற்றும். கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த மாதுளம்பழத்தின் சாறை அருந்தலாம்.