ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினம் ஒரு கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...!!

தினமும் ஒரு கப் அளவு கேரட் 3 வாரம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கலாம். கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம்,  பீட்டா கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளது. 

கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற முடியும். இதனால் இதய நோய்களை தடுக்க முடியும்.
 
தினமும் கேரட்டினை சாப்பிட்டால் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகின்றன. செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியை  தருகின்றது.  
 
கேரட்டில் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்களும், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருளும் உள்ளது. வைட்டமின் ஏ சத்து கல்லீரலுக்கு மிகவும் சிறந்தது. கேரட்டினை மென்று சாப்பிட்டும் போது உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும். பற்களின் கரைகள் போய்விடுகிறது. 
 
கேரட்டை வேக வைப்பதன் மூலம் அதன் கடினமான சுவர்களில் அடைபட்டிருக்கும் பீட்டா கரோட்டின் வெளிவருகிறது. கேரட்டை சமைக்கும் போது சிறிது வெண்ணெய் சேர்த்தால் அதன் மொத்த சத்தையும் உடல் நன்றாக எடுத்து கொள்ளும்.
 
பீட்டா கரோட்டின் நமது உடலுக்கு சென்றவுடன் வைட்டமின்-ஏ வாக மாறுகிறது. இது கண் பார்வையை தெளிவாக்குவதுடன் சரும பளபளப்புக்கும் உதவுகிறது.