1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெறும் வயிற்றில் மூலிகை நீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!

நீண்ட ஆயுளுடன் திடமாகவும், வளமாகவும் வாழ இயற்கை மருத்துவம் உதவுகிறது. நமது சித்த மருத்துவத்தில் பல எண்ணிடலங்கா அற்புதங்கள் இருக்கின்றன. அவற்றிலுள்ள மூலிகைகள் நோய்களை தீர்க்கும் மற்றும் நோய்களை தடுக்கும் அபூர்வ ஆற்றல் பெற்றவை.

 
மூலிகை நீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்:
 
* துளசி, வில்வம் அல்லது அருகம்புல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து இரவில் ஒரு லிட்டர் நீரில் போட்டு மூடி விடுங்கள். மறுநாள் அந்த நீரை விடியற்காலையில் அருந்த வேண்டும். அவ்வாறு உண்டால் உண்டாகும் பலன்கள்  அற்புதமானது.
 
* உடலிலுள்ள அனைத்து குடல்கள் மற்றும் சிறு நீப்பையில் இருக்கும் வெப்பம் தணியும். உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி பெறும். மலச்சிக்கல் குணமாகும். உடலில் வெப்பம் சம்பந்தமான நோய்கள் தீரும்.
 
* ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் நெருங்காது. அவ்வாறு இருந்தாலும் அவர்களுக்கு நோயின் தீவிரம் குறைந்து  கட்டுப்படும்.
 
* மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் நோய் குணமாகும்.வாயுத் தொல்லைக்கு :
 
* வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும்  நீங்கும்.
 
* ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால்  தலைவலி குணமாகும்.