Daily Horoscope
✕

பீட்ரூட் ஜூஸ் தினமும் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் !!

Written By Sasikala
Updated: வியாழன், 19 நவம்பர் 2020 (09:56 IST)

பீட்ரூட்  கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
 
பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு  படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். 
 
பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. 
 
பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில்  பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.
 
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம். 
 
புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப  நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

எல்லாம் காட்டு

மனிதர்கள் 1400 வருடங்கள் வாழ முடியுமா?.. ஆக்ஸ்போர்டு பேராசியர் கணிப்பு...

உடல் ஆரோக்கியத்தை பேணும் அற்புத விதைகள்!.. வாங்க பார்ப்போம்...

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments