திங்கள், 8 டிசம்பர் 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (05:55 IST)

சாதரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் அம்மான் பச்சரிசி மூலிகையின் பயன்கள் !!

சாதரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் அம்மான் பச்சரிசி மூலிகையின் பயன்கள் !!
அம்மான் பச்சரிசி பூக்களின் நிறங்களின் அடிப்படையில் பெரியமான் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி, வயம்மாள் பச்சரிசி போன்ற பெயர்களில் அழைக்கபடுகின்றன.

அம்மான் பச்சரிசியின் இலைகளை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து 5 - 7 கிராம் அளவு மோரில் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மலசிக்கலை போக்கும். 
 
இதன் இலைகளை சமைத்து சாப்பிட்டால் உடல் வறட்சி நீங்கும். பனியினால் ஏற்படும் வாய், நாக்கு, உதடு, வெடிப்பு குணமாகும். இதை தூதுவளை இலையுடன் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பலமாகும்.
 
அம்மான் பச்சரிசியை ஒரு கோலி குண்டு அளவு எடுத்து நன்றாக அரைத்து பாலில் கலந்து தினம் ஒரு வேளை மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீர்கடுப்பு, நமைச்சல் ஆகியவை குணமாகும்.
 
சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதத்தை போக்கும் குணம் உண்டு. உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து தாது விருத்தி ஏற்படும். இதை வெள்ளி பஸ்பம் என்றும் கூறுவார்கள்.