திங்கள், 6 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (09:16 IST)

சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றும் வாழைத்தண்டு !!

வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம்.


சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு சாறினை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், விரைவில் சிறுநீரகக் கற்கள் கரைந்து சிறுநீரின் வழியே வெளியேறிவிடும்.

வாழைத்தண்டு சாறில் லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து வந்தால், வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் மற்றும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இரண்டும் சேர்ந்து, பொட்டாசியம் சிட்ரேட்டாக மாறி கிட்னியில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்கும்.

வாழைத்தண்டு உடலில் சுரக்கின்ற இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதால் சர்க்கரை நோய்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக உள்ளது.

வாழைத்தண்டை சமைத்து அல்லது சாறாக உணவில் தொடர்ந்து ஏதேனும் ஒரு வடிவில் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகள் வெளியேறும்.