ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

இயற்கையில் கிடைக்கும் முருங்கைக் கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்

பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப்புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
கர்ப்பப்பையின் குறைகளைப் போக்கி, கருத்தரிக்கும் திறனை ஊக்குவித்து, பிரசவத்தைத் துரிதப்படுத்த உதவுகிறது. முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
 
முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டால்  சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
 
முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும். முருங்கை இலைகளை  நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.
 
ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கைக்கீரையைச் சூப் செய்து குடித்து வருவது நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்.