1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (15:18 IST)

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா அதிமதுர பொடி...!!

அதிமதுரம் இருமலுக்கு அதிமதுரம், சுக்கு, சிற்றரத்தை, பேரிச்சங்காயின் சதை இவற்றில் வகைக்கு 10 கிராம் எடை எடுத்து, பொடி செய்து, ஆறு பங்கு வைத்து மடித்து வைத்துக் கொள்ளவும்.


ஆழாக்குப் பாலை ஒரு பாத்திரத்தில் விட்டு, இந்தத் தூளில் ஒரு பங்கை எடுத்து ஒரு துணியில் சிறிய மூட்டை போலக் கட்டி இந்தப் பாலில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, அந்தப் பாலை இறக்கி இளஞ்சூடாக இருக்கும் பொழுது கற்கண்டு பொடித்துப் போட்டுக் கலக்கிக் குடிக்க வேண்டும்.

அதிமதுரம், கிராம்பு, கஸ்தூரி மஞ்சள், விளாமிச்சை வேர், கோடைம், எலக்காய், நெல்லிமுற்றி இவைகளைப் பொடி செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, ஆழாக்கு நெய் விட்டு மருந்து சிவக்கும் வரைக் காய்ச்சி இறக்கி, வடிகட்டி வைத்துக் கொண்டு, காலை, மாலை தேக்கரண்டியளவு வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

அதிமதுரம் தூள்  கலந்த நீரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீக்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள்  கொண்டு வரும்.

சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. அதிமதுரத்தின் போடி சளி மற்றும் இருமல் போன்றவற்றை நீக்கும்.

அதிமதுரம், கோஷ்டம், சீரகம், கார்போக அரிசி வகைக்கு கிராம் எடை எடுத்து அரைத்து இரண்டாழாக்குத் தேங்காயெண்ணெயுடன் கலந்து வாணலியில் விட்டுக் காய்ச்சி மருந்து சிவந்தவுடன் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி வைத்துக் கொண்டு, இந்த எண்ணெய்யைத் தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் வளரும் தலைக்குத் தேய்த்து தலை முழுகியும் வரலாம்.