செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (17:58 IST)

வெற்றிலை போடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா...?

Betel - Calcium
நம் வீட்டில் தாத்தா பாட்டி போன்ற பெரியவர்கள் எப்போதும் வெற்றிலையை போடுவதை பழக்கத்தில் கொண்டுள்ளனர். வெற்றிலை போடுவதால் உணவு எளிதில் செரிமானமாகும் என்பதை அறிந்தே அவ்வாறு செய்தனர். இதனால் பசியும் பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது.


இரவில் வெற்றிலை ஊறவைத்த தண்ணீரை காலையில் குடிப்பதால் அதன் பலன்கள் அதிகம். ஜீரண பிரச்சனையை போக்க வெற்றிலையுடன் சிறிதளவு உப்பு மற்றும் சீரகம் சேர்த்து சாப்பிடலாம். மேலும் வெற்றிலை சாற்றுடன் ஓமம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலப்படும்.

தொண்டைக்கட்டு பிரச்சனைகளுக்கு வெற்றிலை சாற்றுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து போட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

வெற்றிலை காரத்தன்மை கொண்டதாக இருக்கும். இதற்கு தாம்பூலம், வெள்ளிலை, நாகவல்லி, நாகினி, திரயல், சப்த ஷீரா, மெல்லிலை, மெல்லடகு போன்ற பெயர்களும் உண்டு. மேலும் இதில் கருப்பு, வெள்ளை மற்றும் கற்பூர வெற்றிலை போன்றவையும் உண்டு.

வெற்றிலையை எப்போது பயன்படுத்தினாலும் அதில் உள்ள காம்பு மற்றும் நரம்பு பகுதியை நீக்கிவிட்டு பயன்படுத்தவேண்டும். இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், தயமின், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற சத்துக்களை கொண்டுள்ளது.

Edited by Sasikala