1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கருஞ்சீரகத்தின் அற்புத மருத்துவ பயன்கள் !!

நாம் உண்ணும் உணவில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் நலத்தை பாதுகாக்கிறது எல்லாவற்றையும் விட முக்கியமாக கருஞ்சீரகம் அனைத்து விதமான விஷக்கடிகளும் குணப்படுத்துகிறது.

கருஞ்சீரகத்தை நல்லெண்ணெய்யில் அரைத்து, சரும நோய்களான கரப்பான், சிரங்கு, இவற்றுக்கு பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். சினைப்பு, கட்டிகள் கொப்பளங்கள் - இவற்றுக்கும் நல்ல மருந்து. கருஞ்சீரகத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியாக்களை அழிக்கும்.
 
லேசான ஜூரங்களுக்கு நல்ல மருந்து. தலைவலி, கீல் வீக்கம் இவற்றுக்கு விதைகளை வெந்நீரில் இட்டு அரைத்து பூசலாம். இதன் பொடியை தேன் (அ) நீரில் கரைத்துக் கொடுக்க மூச்சு முட்டல் நீங்கும். மோரில் சேர்த்து கொடுத்தால் விக்கல் நிற்கும்.
 
கருஞ்சீரகம் வயிற்றில் உள்ள வாயு தொல்லைகளை நீக்கும் திறன் கொண்டது வயிற்றில் ஏற்படும் உப்புசம் மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சினைகளை போக்குவதோடு மட்டுமல்லாமல் இரைப்பை மற்றும் ஈரலில் ஏற்படும்.
 
கிருமித்தொற்றுகளையும் போக்கும் தன்மை கொண்டது சிறுநீரகத்தில் சேரும் கற்களைக் கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுவதில் திறன் பெற்றுள்ளது.
 
கருஞ்சீரகத்தை பொடி செய்துகொண்டு அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து அதனுடன் சிறிது தேனும் கலந்து பருகி வந்தால் சிறுநீரக கற்கள் மூன்று நாட்களில் வெளியேறிவிடும்.
 
குடல் புழுக்களையும் கருஞ்சீரகம் நீக்கும். உணவுக்கு பயனாகும் எண்ணெய்களின் தயாரிப்பில் கருஞ்சீரகம் எண்ணெய் ஒரு நிலை நிறுத்தும் பொருளாக பயனாகிறது. பட்டு, கம்பளி ஆடைகளின் மடிப்புகளில் கருஞ்சீரகம் விதைகளை போட்டு வைத்தால் பூச்சிகள் தாக்காது.