1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மூக்கடைப்பை நீக்கும் அற்புத வீட்டு வைத்திய குறிப்புகள் !!

மிதமான சுடுநீர் குளியல் மூக்கடைப்பை சரி செய்யும். கட்டி இருக்கின்ற மியூகஸை இளக்கி வெளியேற்றும். தலைக்குளியல்தான் நல்லது. தோள்ப்பட்டையிலிருந்து குளிக்கும் குளியல் நாமே உருவாக்கி கொண்டது.


குளியல் என்றால் தலை முழுகுதல் என்றே பெயர். இதுவே ஆரோக்கியமான குளியல். உடல் சூட்டை குறைக்கும்.
 
பல ஆர்கானிக் கடைகளில், ஆன்லைனில் மூக்கை சுத்தம் செய்யும் பாட் கிடைக்கிறது. அதை வாங்கி மூக்கை அவ்வப்போது சுத்தம் செய்திட எந்த மூக்கடைப்பும் சைனஸ் தொல்லைகளும் வராது. மூச்சு பிரச்னைகள்கூட குறையும்.
 
10 மிளகை இரவில் தேனில் ஊறவைத்து, மறுநாள் காலை அதை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிடலாம். கைக்குட்டையில் 2-3 துளிகள் யூக்கலிப்டிக்ஸ்  எண்ணெய் விட்டு தொடர்ந்து முகர்ந்து பார்க்க மூக்கடைப்பு நீங்கும்.
 
இளஞ்சூடான நீரில் ஹாட் பேக் ஒத்தடம் கொடுப்பதை போடவும். இளஞ்சூடாகவே, மூகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம். குறிப்பாக மூக்கு, மூக்கை சுற்றி  உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுப்பது நல்லது.
 
யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு ஆவி பிடித்திட மூக்கடைப்பு நீங்கும். 3-4 சொட்டு விட்டாலே போதுமானது.
 
நீர்ச்சத்து உடலில் குறையாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நீர்ச்சத்து குறைந்தால்கூட கடினமான அடைப்பு மூக்கில் ஏற்படலாம். நீர்ச்சத்து கொண்ட உணவுகள்,  மூக்கு துவாரம், மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை பிரஷர் கொடுத்து நீக்கும். உடலில் நீர்ச்சத்து போதிய அளவு இல்லையென்றால் எரிச்சல், மூக்கு அடைப்பு,  வீக்கம் ஏற்படலாம்.
 
சுக்கு காபி, இஞ்சி டீ, புதினா டீ ஆகியவற்றைக் குடிக்கலாம். மிளகு கஷாயம், இஞ்சி, சுக்கு கஷாயம் ஆகியவையும் நல்லது. வெந்நீரில் இஞ்சி துருவலை போட்டு ஆவி பிடிப்பதும் நல்ல தீர்வாகும். இஞ்சியின் காரம் மூக்கின் வழியாக சென்று அடைப்பை நீக்கும்.