வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (13:23 IST)

முளைகட்டிய தானியங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் !!

பாசிப்பயறு, கொண்டைக் கடலை, தட்டைப்பயறு, உளுத்தம்பயறு, சோயா பயறு இந்த ஐந்து முளை கட்டிய தானியங்களிலும் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது.


முளைக்கட்டுதல் என்பது பயறுகளை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, நீரை வடிகட்டி, ஊறிய பயறுகளை, ஒரு பருத்தித் துணியில் தளர்வாகக் கட்டி தொங்கவிட வேண்டும். ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறைகள், நீரை தெளித்து ஈரப்பதத்தில் வைக்கும் நிலையில், முளையானது 6 முதல் 8 மணி நேரத்திற்குள் தோன்றும்.

ஒரு நாளில் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளைகளில் எந்த வேளையிலும் முளைகட்டிய தானியங்களை சாப்பிடலாம். ஒரு நாளைக்கு எதாவது ஒரு வேளைதான் சாப்பிட வேண்டும். மதிய உணவில் சாப்பிடுவது இன்னும் சிறந்தது.

மதிய மற்றும் இரவு உணவுகளுடன், வேகவைக்காத முளைகட்டிய தானியங்களை சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது சாப்பிடுவதில் பாதி அளவு வேகவைக்காமலும், பாதி அளவு வேகவைத்தும் சாப்பிடலாம்.

முளைகட்டிய தானியங்களைச் சாப்பிடும்போது சிலருக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

முளைகட்டிய பச்சைப்பயறு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால், 5 - 10 வயதுக்  குழந்தைகளுக்கு அதை அடிக்கடி தரலாம்.

அசிடிட்டி, அல்சர், நெஞ்சு எரிச்சல் பிரச்னைகள் உள்ளவர்களும், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்களும் முளைகட்டிய தானியங்களை நிச்சயமாக வேகவைத்துதான் சாப்பிடவேண்டும்.

இயற்கை உணவான தானியங்கள் புரதச்சத்தும், ஊட்டச்சத்தும் நிரம்பியது. அவற்றை முளை கட்டப்படுவதால் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும் பைரேட்ஸ் என்ற சத்து குறைக்கப்படும், சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்ட எளிதில் செரிமானம் ஆகிடும்.