1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (17:05 IST)

நுரையீரலை பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் ஆடாதொடை !!

Adathodai leaf
நுரையீரலை பலப்படுத்துவதில் ஆடாதொடா முக்கிய பங்காற்றுகிறது. இது, நுரையீரல் அறைகளில் படியும் கசடுகளை நீக்கி சுத்தப்படுத்த உதவுகிறது. எனவே தான், இதை, 'மரணமாற்று' மூலிகை என்பர்.


ஆடாதொடை, நுரையீரல் நோய்களை நீக்க வல்லது. நுரையீரல், உடலின் முக்கியப் பகுதியாகும். இது, நன்கு செயல்பட்டால் தான், ரத்தத்தை சுத்தம் செய்யும். இது காற்றை உள்ளிழுத்து, அதிலுள்ள பிராணவாயுவை பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால், நீண்ட ஆயுள், மனிதர்களுக்கு கிடைக்கும்.

ஆடாதொடை மற்றும் தூதுவளை இலைகளை சம அளவு எடுத்து, காயவைத்து பொடியாக்கி தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், நுரையீரல் உட்பட உடலின் வயிற்றுப்பகுதி, நெஞ்சுப்பகுதிக்கு நல்லது.

ஆடாதொடை மற்றும் கண்டங்கத்திரி வேர்களை இடத்து நீர்விட்டு கொதிக்கவிட்டு, குடிநீராக, திப்பிலி பொடி சேர்த்து அருந்தினால், தொண்டை புகைச்சல் சரியாகும்.

நமது உடலில் புழு, பூச்சிகளை அகற்றும். நுண்கிருமிகளை அழிக்கும். கபத்தை வெளியேற்றும். கஷாயம் வைத்து குடிப்பதால், தீராத மார்புச்சளி, மூச்சுத்திணறல், இருமல், ஜலதோஷம், கக்குவான் இருமல் போன்றவை குணமாகும்.

நெஞ்சுச்சளி, அதனுடன் வலியும் இருந்தால், ஆடாதொடை இலையை கஷாயம் செய்து கிராமப்புறங்களில் பயன்படுத்துவர். அதேபோல், உடலில் ஏற்படும் காயங்களுக்கும் ஆடாதொடை இலையுடன் வெற்றிலையை சேர்த்து, மென்று விழுங்கினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.