வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தோல் நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் ஆவாரம் பூ !!

ஆவாரம் பூவை பச்சை பயறுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் குணமடையும். ஆவாரம்பூவை இடித்து பொடிசெய்து உடலில் தேய்த்து குளித்து வர உடல் பொலிவு பெறும். தோல் நோய்கள் குணமாகும்.

ஆவாரம் பூ, காய், இலை ஆகியவற்றை ஒன்றாக காயவைத்து இடித்து பொடி செய்து 5 கிராம் அளவு காலை, மாலை இருவேளை வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு  வர மிகுந்த தாகம், உடல் எரிச்சல், உடல் சோர்வு ஆகியவை தீரும். மேலும் உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
 
ஆவாரையின் இலை, பூ, காய், பட்டை, வேர் என அனைத்துமே மருத்துவக்குணங்களை கொண்டவை. ஆவாரம் இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.
 
கைப்பிடி அளவு ஆவாரம் பூவை எடுத்து இரண்டு டம்ளர் நீரிலிட்டு கொதிக்க வைத்து இனிப்புக்கு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். வாரத்துக்கு மூன்று நாள் இதை குடித்துவந்தால் சிறுநீர்கடுப்பும் எரிச்சலும் விரைவில் மறையும்.
 
ஆவாரை பூவை குடிநீராக, துவையலாக, பருப்பு கலந்து கூட்டாக செய்து சாப்பிடலாம். பாசிப்பருப்புடன் வேகவைத்து நெய் கலந்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஆவாரம் பூக்களை கொண்டு தேநீர் தயாரித்து குடிக்கலாம். ஆவாரம் பூவில் ரசம், குழம்பு வைத்தும் சாப்பிடலாம். ஆவாரம் பூக்களை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்து கொண்டும் பயன்படுத்தலாம்.
 
ஆவாரை உடலுக்குள் செல்ல செல்ல உறுப்புகளை பலப்படுத்தும் என்கிறது சித்தமருத்துவம். பக்க விளைவில்லாமல் ஒன்று உடலுக்கு நல் மருந்தாக மட்டுமல்ல  ருசியான உணவாகவும் இருக்கிறது என்றால் அது ஆவாரைதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.