புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்தாக பயன்படும் ஆராக்கீரை !!

ஆராக்கீரை அல்லது ஆலக்கீரை என்ற பெயரில் விற்பனைக்கு வருவதுண்டு. தமிழகமெங்கும் நீர் நிலைகளிலும் வாய்க்கால்களிலும் தானே வளர்வது. இதன் இலை  மருத்துவ பயனுடையது.

செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட நீர்த்தாவரம். இலையே மருத்துவப் பயனுடையது. ஆரைக்கீரையை சமைத்து உண்பதால் தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும்.
 
ஆரைக்கீரை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.
 
நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்கும்.
 
மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 
 
குறிப்பு: இது கருத்தடை மூலிகையாக செயல்படுவதால் குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்கள் கருவுற்ற பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.