ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பலவகையான மூலிகை தேநீர் வகைகளும் பயன்களும் !!

செம்பருத்திப்பூ தேநீர்: ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

துளசி இலை தேநீர்: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை தேநீர்ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை   அளிக்கும்.
 
ஆவாரம் பூ தேநீர்: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் டீ சாப்பிடலாம்.   இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.
 
கொத்தமல்லி தேநீர்: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.
 
புதினா இலை தேநீர்: புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
 
கொய்யா இலை தேநீர்: கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.
 
மூலிகை தேநீர் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், முக்கியமான ஊட்டச்சத்துக்களை மூளைக்கு அனுப்பவும் உதவுகிறது. மூலிகை டீயில் உள்ள  ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவும்.
 
செரிமானக்கோளாறுகள் வராமல் தவிர்க்க வாரம் ஒருமுறை இதை குடிக்கலாம். இயல்பாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இவை உதவுகிறது.
 
உடல் சோர்வை நீக்கி உடலுக்கு பலத்தை கொடுக்கிறது. சளி, காய்ச்சல், இருமல் இருக்கும் போது இதை குடித்தால் உடனடியாக உடலுக்கு வலுகிடைக்கும்.