Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரணுக்கள் உற்பத்திக்கு உதவி செய்யும் இயற்கை பொருள் அக்ரூட்

Written By Sasikala
Updated: வெள்ளி, 23 ஜூன் 2017 (13:49 IST)

 
 
சாக்லேட், கேக் போன்றவற்றில் சேர்க்கப்படும்போது தனி ருசி கொடுக்கும் வாதுமைப் பருப்பில் அதிக அளவு மெலட்டின் சத்து  உள்ளது. நல்ல தூக்கத்துக்கு இது அவசியமாகும். இயற்கையாகவே அதிக மெலட்டின் இருப்பதால் வாதுமைப் பருப்பு மூளைக்கு ஓய்வு கொடுத்து நல்ல தூக்கத்தைத் தருகிறது.
 
அக்ரூட்டை தொடர்ந்து சாப்பிடுவதால் ‘டிமென்சியா’ என்ற ஞாபக மறதி நோய் உண்டாகாமல் தடுக்கலாம். இதில் உள்ள  ஒமேகா 3 அமிலம், இதயத்துக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது. மேலும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பைக்  கூட்டுகிறது.
 
ஒமேகா 3 மூளைக்கும் நல்லது. இது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை எளிமையாக்கி நினைவாற்றலை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க அக்ரூட் உதவுகிறது. ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ் உள்ளிட்டவற்றில் இருந்து  காக்கிறது.
 
அக்ரூட்டில் உள்ள அமிலம், எலும்பை பலப்படுத்த உதவுகிறது. போலிக் அமிலம், ரிபோபிளேவின், தையாமின் உள்ளிட்ட பி  காம்ப்ளெக்ஸ் சத்துகள் அக்ரூட்டில் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் உணவில் அதிகமாக சேர்த்துகொள்ளலாம்.
 
வைட்டமின் பி7 என்ற பயோடின் உள்ளதால் முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சிக்கும், உறுதித் தன்மைக்கும் உதவுகிறது. சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைக் குறைத்து முதுமையைத் தாமதப்படுத்துகிறது. ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. வாழ்நாளைக் கூட்டும் தன்மை கொண்டிருக்கிறது.


 

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments