வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: சனி, 10 மே 2014 (19:02 IST)

ராகுல் தேர்தல் விதிமுறையை மீறவில்லை - சம்பத்

ராகுல் காந்தி வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டதில், தேர்தல் விதிமுறைகளை அவர் மீறவில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் தெரிவித்துள்ளார்.
 
ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிக்கு கடந்த 7 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, ராகுல் காந்தி வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
 
அப்போது, ஒரு வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை பார்வையிட்டார். இதுகுறித்து சர்ச்சை எழுந்தது. ராகுல் தேர்தல் விதிமுறையை மீறயதாக வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
 
இந்நிலையில் தேர்தல் தலைமை அதிகாரி சம்பத் இன்று கூறியதாவது:-
 
இது குறித்து மாவட்ட நீதிபதி, தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் சிலபேரிடம் விசாரித்தோம். அப்போது ராகுல்காந்தி 10.30 மணியளவில் அங்கு வந்தார். அவர் வந்தபோது இயந்திரம் வேலை செய்யாமல் இருந்தது. கோளாறு ஏற்பட்ட இயந்திரத்தை அதிகாரிகள் சரிசெய்து கொண்டிருந்துள்ளனர்.
 
மேலும், அவர்கள் தினமும் போட்டோகிராபர்கள் எடுக்கும் படத்தை சோதனை செய்தார்கள். அந்த வாக்குச்சாவடியில் இருந்த மற்ற வேட்பாளர்களின் ஏஜெண்ட்டுகளிடமும் விசாரித்துள்ளார்கள். அப்போது அந்த நேர்த்தில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. எனவே அவர் தேர்தல் விதிமுறையை மீறவில்லை என்றார்.