வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 29 மார்ச் 2014 (15:26 IST)

மனதிற்கு பிடித்ததை செய்து 12 பல்கலைக்கழகங்களில் இருந்து ஸ்காலர்ஷிப்புடன் கூடிய மேற்படிப்பிற்கு அனுமதி கடிதம் பெற்றுள்ள சாதனை மாணவர்

ஒடிசாவை சேர்ந்த 18 வயது மாணவருக்கு உலகில் உள்ள முக்கியமான 12 பல்கலைக்கழகங்கள் ஸ்காலர்ஷிப்புடன் கூடிய மேற்படிப்பிற்கு, அனுமதிக் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன. 
 
ஒடிசாவை சேர்ந்த மாணவர் சுதன்ஷு நாத் மிஸ்ரா. இவருக்கு வயது 18. பண்ணிரண்டாம் வகுப்பில் 93.2% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்த இவர், மேற்படிப்பை தொடராமல் ஒரு வருட இடைவேளை எடுக்க முடிவு செய்தார்.
Bangalore boy wins scholarship from 12 top varsities
சுதன்ஷூவின் இந்த முடிவிற்கு பலரும் மறுப்பு தெரிவிக்க, தான் என்ன செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருந்த இவர் கூடைப்பந்து விளையாடுவதிலும் அவருக்கு விருப்பமான ஆய்வு பணிகளை செய்வதிலும் ஒரு வருடத்தை செலவழித்தார். 
 
அந்த சமயத்தில், செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியில் 'ஈயத்தின் விஷத்தன்மை' குறித்த ஒரு ஆராய்ச்சியை சமர்ப்பித்த சுதான்ஷு, ஏடிஎம் இயந்திரங்களின் திருட்டைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு அமைப்பையும் உருவாக்கி இருந்தார்.
 
மேலும், சமூக காரணங்களை அடிப்படையாகக் கொண்ட இரண்டு புதிய திட்டங்களையும் துவங்கியுள்ள இவர், விளையாட்டு வீரர்கள் அவர்களுக்கு தேவைப்படும் போது சுலபமாக தண்ணீர் பருக அவர்களது, ஹெல்மெட்டுகளிலேயே தண்ணீரை சேகரித்து வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு அமைப்பையும் உருவாக்கியுள்ளார். 
 

இந்நிலையில், சுதன்ஷு  மேற்படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பியபோது பலரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுமென கருதினர். 
 
ஆனால், வியப்பளிக்கும் விதமாக உலகின் முக்கியமான 12 பல்கலைக்கழங்களில் இருந்து ஒரு வருடத்திற்கு 27 லட்சம் முதல் 36 லட்சம் வரையிலான ஸ்காலர்ஷிப்புடன் கூடிய மேற்படிப்பிற்கு அனுமதிக் கடிதங்கள் சுதன்ஷுவிற்கு கிடைத்துள்ளன.  
 
அளவிட முடியாத மகிழ்ச்சியில் இருக்கும் சுதன்ஷு, இன்னும் எந்த பல்கலைக்கழகத்தில் சேர்வது என்ற முடிவெடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். 
 
மேற்படிப்பை முடித்தவுடன் இந்தியாவிற்குத் திரும்பி சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்பதைத் தனது விருப்பமாக சுதன்ஷு  தெரிவிக்கிறார்.
 
சுதன்ஷுவிற்கு அழைப்பு விடுத்துள்ள பல்கலைக்கழகங்கள் : MIT, Georgia Tech, University of Cambridge, Yale University, Columbia University, University of Pennsylvania, University of California Berkeley, Rice University, Duke University, Carnegie Mellon University, University of California Los Angeles, Harvey Mudd College.