1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 19 மே 2014 (16:09 IST)

தேர்தலில் காங்கிரசின் படுதோல்விக்கு மன்மோகன்சிங்கே காரணம் - கமல்நாத்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து இந்த படுதோல்விக்கு மன்மோகன்சிங்கே காரணம் என கமல்நாத் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:- மன்மோகன்சிங் பலவீனமான பிரதமர் இல்லை, அவரை சோனியாகாந்தி தனது விருப்பத்துக்கு ஏற்ப ஆட்டி வைக்கவும் இல்லை. ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் அடைந்த தோல்விதான் தேர்தல் தோல்விக்கும் காரணம் அரசின் அனைத்து பிரச்சனைளுக்கும் தகவல் பரிமாற்றம் இல்லாததும் மன்மோகன் மெளனமாக இருந்ததுமே காரணம்.
 
2ஜி ஊழல் குற்றச்சாட்டு வந்த உடனேயே, அதுகுறித்து உரிய விளக்கத்தை மக்கள் முன்பாக பிரதமர் வைத்திருக்க வேண்டும். அமைச்சர்களும் அதை செய்ய தவறிவிட்டனர்.மக்களுடனான தகவல் பறிமாற்றத்தில் ஏற்பட்ட சுணக்கம்தான் காங்கிரசின் தேர்தல் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். 
 
இந்த தேர்தலில் நடுத்தர வர்க்கத்து மக்கள்தான் காங்கிரசுக்கு எதிராக அதிக அளவில் வாக்களித்துள்ளனர் என்று கமல்நாத் கூறியுள்ளார்.