வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 30 ஏப்ரல் 2014 (20:37 IST)

தலித்துகளை அவமதித்து ராம்தேவ் கூறியதை நியாயப்படுத்துகிறாரா மோடி - ஷகீல் அகமது

ராம்தேவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து நரேந்திர மோடி எதுவும் பேசாமல் மவுனமாக இருக்கிறார். தலித்துகளை அவமதித்து ராம்தேவ் கூறியதை நியாயப்படுத்துகிறாரா மோடி என்று ஷகீல் அகமது கூறியுள்ளார்.
 
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலித் மக்களின் வீடுகளுக்கு தேனிலவுக்கு செல்வது போல் சென்று வருவதாக யோகா குரு பாபா ராம்தேவ் விமர்சனம் செய்தார். அவரது கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அவர் மீது உத்தர பிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
 
ராம்தேவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து நரேந்திர மோடி எதுவும் பேசாமல் மவுனமாக இருக்கிறார். ஒவ்வெரு விஷயத்தைப் பற்றியும் பேசும் அவர், இந்த விஷயத்தில் மவுனமாக இருப்பது ஏன்? அப்படியென்றால் தலித்துகளை அவமதித்து ராம்தேவ் கூறியதை நியாயப்படுத்துகிறாரா அல்லது அவருக்கு மறைமுகமாக ஆதரவு தருகிறாரா?
 
இந்த விஷயத்தில் பாஜக ராம்தேவுக்கு ஆதரவாக இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் ராம்தேவ் மட்டும் அல்லாமல் பாஜகவுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்கில் தியாகி கேப்டன் விக்ரம் பத்ராவின் பெயரால் வாக்குகளை பெற பாஜக முயற்சி செய்கிறது. 
 
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடு இந்தியா என்று உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்தியா பின்தங்கியிருக்கிறது என்று எங்களுக்கு எதிராக மோடியின் எதிர்மறை பிரச்சாரத்திற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது.
 
இதற்காக காங்கிரசையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியையும் பாஜக பாராட்ட விரும்பவில்லை என்றால், இந்த சாதனைக்கு கருவியாக இருந்த மக்களையாவது பாராட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.