வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Webdunia

அலட்சியமாக பெண்ணின் குடலை வெட்டி, அகற்றிய மருத்துவர்

FILE
ஒடிசாவில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வந்த ஒரு இளம்பெண்ணின் சிறு குடலை தவறுதலாக மருத்துவர் வெட்டி அகற்றியதால் அப்பெண் தற்போது கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்.

மமதாரனி பெஹெரா என்னும் 22 வயது இளம்பெண் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பலியாபால் என்னும் ஒரு டவுனில் உள்ள அரசு மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கபட்டார்.

ஜூலை மாதம் 24 ஆம் தேதி, பிற 90 பெண்களோடு மமதாரனிக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் வீட்டிற்கு அனுப்பிவைக்கபட்டார்.

அறுவை சிகிச்சை முடிவடைந்த அடுத்த நாள், மமதாரனிக்கு கடும் நெஞ்சு வலி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே வாந்தி மற்றும் மயக்கத்தால் அவதிப்பட்ட அவரை அவரது கணவர் அவர்களின் வீட்டிற்கு அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஆனால், அங்கு மமதாரனியின் உடல் நிலை மோசமடைந்ததால், அவர் வேறொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கருத்தடை அறுவை சிகிச்சை முடிந்த 4 நாட்களுக்கு பின்னர் மமதாரனியை பரிசோதித்த மருத்துவர், மமதாரனியின் சிறுகுடல் பகுதி வெட்டி அகற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அப்போதுதான் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மமதாரனியின் ஃபலோபியன் குழாயுடன், சிறு குடலையும் வெட்டி அகற்றியது தெரியவந்துள்ளது.

உடனடியாக மமதாரனியின் உயிரை காக்க மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆயினும், அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிவித்த மாவட்ட மருத்துவ அதிகாரி அனுப் கோஷ், இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுமென கூறியுள்ளார்.