நடிகையை திருமணம் செய்யப்போகிறார் யுவராஜ் சிங்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டராக இருப்பவர் யுவராஜ் சிங்.
இவர் பாலிவுட் நடிகையான ஹேசல் கீச்சை வருகிற டிசம்பர் மாதம் திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார். இந்த தகவலை யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங் உறுதி செய்துள்ளார். இது ஒரு காதல் திருமணம்.
மேலும், யுவராஜின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதிக்கு முன்னதாகவே திருமணம் நடைபெறும் என்று ஷப்னம் சிங் கூறியுள்ளார். பில்லா, பாடிகார்ட் போன்ற படங்களில் நடித்தவர் ஹேசல் கீச் என்பது குறிப்பிடத்தக்கது.